Kanniyakumari | இதற்க்காக மாத்திரை போட்ட பெண் மயங்கி விழுந்து மரணம்
Kanniyakumari | இதற்க்காக மாத்திரை போட்ட பெண் மயங்கி விழுந்து மரணம் #kanniyakumari #death #thanthitv கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே, மனநல பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலுவிளை பகுதியைச் சேர்ந்தவர் மரிய சான்றா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக மனநல பாதிப்பு தீவிரமடைந்ததால், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார். இதையடுத்து மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
