கணவரை திருத்த எலி மருந்து குடித்த பெண் மரணம்

கணவரை திருத்த எலி மருந்து குடித்த பெண் மரணம்
x

சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் நகர் ஆறாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை(32), அவரது கணவர் ஹரி(36).

இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆன நிலையில், தனது கணவர் மதுவுக்கு அடிமையாகி இருப்பதால் அவர் குடியை விடுவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை மிரட்டுவதற்காக எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த இறப்பு குறித்து கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்