ரயில் மோதி பெண் பலி - பார்க்க சென்றவரும் ரயில் மோதி உயிரிழந்த சோகம்
ரயில் மோதி பெண் பலி - பார்க்க சென்றவரும் ரயில் மோதி உயிரிழந்த சோகம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே ரயிலில் அடிபட்டு அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிந்தலவாடி கிராமத்தில், அன்னக்கிளி என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக தண்டவாளம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து ஈரோடு சென்ற பயணிகள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்து, அங்கு அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இதில், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான ராஜலிங்கம் என்பவரும் அங்கு நின்றுக் கொண்டிருந்திருக்கிறார். பின்பு தண்டவாளம் அருகே நடந்து சென்ற அவர் மீதும் மற்றொரு ரயில் மோதியதில், ராஜலிங்கமும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில் ஹாரன் ஒலி எழுப்பியும் ராஜலிங்கத்திற்கு கேட்காததால், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
