சட்ட விரோதமாக ஏரி மண் வாங்கிய பெண் கவுன்சிலர் கைது

x

செங்கல்பட்டு அருகே சட்டவிரோதமாக ஏரி மண் வாங்கிய குற்றச்சாட்டில் திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே உள்ள பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள ஏரியிலிருந்து அரசு கட்டுமான பணிகளுக்கு மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய பெண் கவுன்சிலர் சின்னம்மாள் என்பவர் சட்ட விரோதமாக ஏரி மண் வாங்கி வருவதாக கிராம நிர்வாக அலுவலர் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்... இதன் அடிப்படையில், பெண் கவுன்சிலர் சின்னம்மாள் கைது செய்யப்பட்டார். இதனிடையே விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பணம் கொடுத்து வாங்கிய கவுன்சிலரை கைது செய்துள்ளதாக கவுன்சிலரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்