"வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் சித்ரவதை" : தீக்குளித்து பெண் தற்கொலை

சென்னை கே.கே.நகரில் தீக்குளித்து இறந்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாக அந்த பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
"வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் சித்ரவதை" : தீக்குளித்து பெண் தற்கொலை
Published on
சென்னை கே.கே.நகரை சேர்ந்த விமல்ராஜ், திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியை சேர்ந்த கார்த்திகாவை கடந்த 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். விமலின் பெற்றோர், வரதட்சணை கேட்டு அடிக்கடி கார்த்திகாவை சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கார்த்திகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர், தங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறுகின்றனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை, கார்த்திகாவின் சடலத்தை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். கார்த்திகாவின் இறப்பு குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com