பெண் தூக்கிட்டு தற்கொலை - காரணம் என்ன? - விசாரணை
சென்னை வியாசர்பாடியில் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புது காமராஜர் நகர், பட்டினத்தார் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் தீபாராணி என்பவருடன் திருமணமாகி ரோகித் என்ற மகன் உள்ளார். ரோகித்திற்க்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக தீபாராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது மகன், தாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், தகவலறிந்து சென்ற செம்பியம் போலீசார், தீபாராணியின் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
