திண்டிவனத்தில் கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை

திண்டிவனத்தில் கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனத்தில் கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை
Published on
ஆர்.எஸ்.பிள்ளை நகரில் வசிக்கும் அன்பு என்பவரின் மனைவி உமா மகேஸ்வரி, பல இடங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறியுள்ளார். கடன்காரர்களின் வசைகளை கேட்டு மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்த பெண்ணின் வீட்டில் சோதனை செய்த போது, தற்கொலை கடிதம் சிக்கியுள்ளது. அதில், ஜமுனா என்பவர், தகாத வார்தைகளால் திட்டியதால் இந்த முடிவை எடுத்தாக குறிப்பிட்டுள்ளார். உடனடியாக ஜமுனாவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அந்த தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்த திண்டிவனம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com