பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கே விபூதி அடித்த பெண்
திருபத்தூரில் அடகு வைத்த நகையை மீட்டு தரக்கோரி நிதி நிறுவனத்தில் மோசடி செய்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூரை அடுத்த தண்டுகானூர் பகுதியைச் சேர்ந்தவர் துர்கா தேவி, இவர் 24 சவரன் நகையை வங்கியில் அடகு வைத்துள்ளார். இந்த நிலையில் வங்கியில் உள்ள நகையை மீட்டு தருமாறு பஜாஜ் பைனான்ஸ் கோல்ட் லோன் நிதி நிறுவனத்தை அணுகிய துர்கா தேவி நிதி நிறுவனம் மூலம் பணத்தை பெடரல் வங்கியில் செலுத்தியுள்ளார். இதனையடுத்து துர்காதேவி தனது உறவினரை வரவழைத்து நகையை யாருக்கும் தெரியாமல் கொடுத்து அனுப்பியுள்ளார். இதனால் சுதாரித்து கொண்ட வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் துர்கா தேவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Next Story
