அபராதம் என்ற பெயரில் அடாவடி வசூல் செய்த பெண்.. வசமாக சிக்கிய வீடியோ காட்சி

x

கடைகளில் அபராதம் என்ற பெயரில் அடாவடி வசூல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடைகளில் அபராதம் என்ற பெயரில் அடாவடி வசூல் செய்யும் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பல்லடத்தை அடுத்த கரடிவாவி பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வரும் ஸ்ரீனிவாஸிடம், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் என கூறி பெண் ஒருவர், 7000 ரூபாய் பணம் பெற்று ரசீது வழங்கவில்லை. தொடர்ந்து அருகில் உள்ள செல்போன் கடையிலும் பணம் கேட்டுள்ளார். சந்தேகமடைந்த பொதுமக்கள் அடையாள அட்டையை கேட்டபோது, அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். புகாரை அடுத்து அங்கு வந்த காமநாயக்கன் பாளையம் போலீசார், விசாரித்த போது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணி புரியும் சாந்தி என்பது தெரிய வந்தது. சம்பவம் குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்