கன்னியாகுமரி மாவட்டம் வடிவிஸ்வரம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் லட்சுமி மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். மாதவன் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்த நிலையில், அவர் கந்துவட்டி கேட்டு மிரட்டி வருவதால் தற்கொலைக்கு முயன்றதாக லட்சுமி தெரிவித்துள்ளார்.