பள்ளி சிறுமி குறித்து ஆபாச பதிவு - பெண் கைது...

பள்ளி சிறுமி குறித்து ஆபாசமாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பெண்ணை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பள்ளி சிறுமி குறித்து ஆபாச பதிவு - பெண் கைது...
Published on
நடிகர் விஷால் பற்றி ஆபாசமான, அவதூறான கருத்துக்களை யூடியூப் மூலம் பரப்பி பிரபலமானவர் விஸ்வ தர்ஷினி. இவர் கடந்த ஆண்டு இவரது தோழி ஒருவருடன் ஏற்பட்ட தகராறில், தோழியின் பள்ளி செல்லும் குழந்தை குறித்து ஆபாசமான படங்களையும், அவதூறு கருத்துக்களையும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து சிறுமியின் தாயார் ராயப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் விஸ்வ தர்ஷினி மீதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் திருச்செங்கோட்டில், பதுங்கியிருந்த விஸ்வ தர்ஷினியை, சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com