Crime | Tolet | பின்னணி தெரியாமல் நம்பி வாடகை விட்டு உறவு போல் பழகிய நபர் - 52 வயது நபரின் மறுமுகம்

பின்னணி தெரியாமல் நம்பி வாடகை விட்டு உறவு போல் பழகிய நபர்

Crime | Tolet | பின்னணி தெரியாமல் நம்பி வாடகை விட்டு உறவு போல் பழகிய நபர் - 52 வயது நபரின் மறுமுகம் #chennaiarrest #tolet #crime நூதன முறையில் நகைகளை திருடி பைக் ரைடு - டிப்டாப் ஆசாமி கைது தமிழகம் முழுவதும் நூதன முறையில் நகைகளை திருடி, ஆடம்பரமாக பைக் ரைடு சென்று வந்த டிப்-டாப் திருடனை சென்னை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவைச் சேர்ந்த 52 வயதான சாய் ஜெகதீஷ், டாக்டர் என போலியாக அறிமுகமாகி, திருவண்ணாமலையில் ரகுராஜ் என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார். பின்னர், அவரது மகன்களுக்கு போட்டோஷூட் மற்றும் மாடலிங் வாய்ப்பு ஏற்பாடு செய்வதாக ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. ராயப்பேட்டையில் உள்ள மாலில், போட்டோஷூட்டுக்கு முன் நகைகளை கழட்டச் சொல்லி வாங்கிய அவர், நகைகளுடன் தப்பியோடியதாக தெரிகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை நடத்திய போலீசார், சாய் ஜெகதீஷை கைது செய்தனர். விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் 50 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை திருடி, அவற்றை விற்று காஷ்மீர் வரை பைக் ரைடு சென்று உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com