அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர்கள்... மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் - கமல்ஹாசன், டிவிட்டர்

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர்கள்... மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் - கமல்ஹாசன், டிவிட்டர்
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவக்கி விடுவோம் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். தங்களது பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் என்றும், இது தான் கழகங்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் உள்ள வித்தியாசம் என கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com