``பச்ச மண்ணுனு கூட பாக்காம அத்துமீறிய டாக்டர்’’ - சட்டத்தை கையிலெடுத்த உறவினர்கள்

சிறுமியிடம் பாலியல் சீண்டல் - நடவடிக்கை எடுக்காத காவல்துறை?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, சிறுமி அளித்த பாலியல் சீண்டல் புகார் மீது வழக்கு பதிவு செய்யாத காவல்துறை, சிறுமியின் உறவினரை கைது செய்த சம்பவத்தை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுமி ஒருவர், தன் பள்ளியில் நடைபெற்ற சிலம்ப பயிற்சி முகாமில் கலந்து கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த மருத்துவர் சிறுமியிடம் தகராறு செய்து, சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு திட்டியுள்ளார். மேலும், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து புகார் அளித்தும் காவல்நிலையத்தில், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர் ஒருவர், குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், சிறுமியின் உறவினரை போலீசார் உடனே கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், போலீசாரை கண்டித்து, ஆண்டிப்பட்டி - ஏத்தகோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com