காற்றாலை அமைக்க கடன் பெற்று மோசடி - வங்கி மேலாளர்கள் உள்பட 18 பேர் மீது வழக்கு

காற்றாலை அமைக்க 35 கோடி கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக முன்னணி பொதுத்துறை வங்கி மேலாளர்கள் உள்பட 18 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது
காற்றாலை அமைக்க கடன் பெற்று மோசடி - வங்கி மேலாளர்கள் உள்பட 18 பேர் மீது வழக்கு
Published on
தேனியில் 13 இடத்தில் காற்றாலை அமைப்பதாகக் கூறி 4 தனியார் நிறுவனங்கள் முன்னணி பொதுத்துறை வங்கியில் 35 கோடி கடன் பெற்றுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வில், வெறும் ஏழு இடங்களில் மட்டுமே காற்றாலை அமைக்கப்பட்டதும், வங்கியில் வாங்கிய கடன், வேறு தொழிலுக்கு முறைகேடாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. இது குறித்து வங்கியின் மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன் சிபிஐ-யிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், கிரீம்ஸ் சாலையில் உள்ள வங்கி கிளையில் பணிபுரிந்த தலைமை மேலாளர்கள் மௌலி சங்கர், ரவிக்குமார் கல்யாணி, ஸ்ரீனிவாச ராவ், பிவிஎஸ் சாஸ்திரி, நான்கு நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிண்டிகேட்டை தொடர்ந்து முன்னணி பொதுத்துறை வங்கி கடன் மோசடி குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com