Cuddalore | "உங்க குழந்தைக்கு குட்கா கொடுப்பீர்களா?"- ஆவேசப்பட்ட கடலூர் SP..
கடலூரில் குட்கா கடத்தல் கும்பல் சிக்கிய நிலையில், அவர்களிடம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், சரமாரியாக கேள்வி எழுப்பினார். பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த கும்பல், நம்பர் பிளேட்டை மாற்றியது விசாரணையில் தெரியவந்தது. மூட்டை மூட்டையாக 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 420 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் விசாரணை நடத்திய எஸ்பி, உங்கள் குழந்தைகளுக்கு குட்கா கொடுப்பீர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
Next Story
