2026ல் விஜய் இங்கே தான் போட்டியா? - திடீர் வைரல்

x

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவார் என சூசகமாக கட்சி நிர்வாகி ஒட்டிய போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் பிறந்தநாள் வருகின்ற 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் கட்சி தலைவர் விஜய்க்கு வித விதமான வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் திருவரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளர் விஜய் என குறிப்பிட்டு திருச்சி தொண்டரணி நிர்வாகி ஒருவர் ஒட்டிய போஸ்டர் கவனத்தை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்