உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆசிரியர்கள் பணிக்கு ஆபத்து? ஆதரவாக இறங்கும் பள்ளிக்கல்வித்துறை
டெட் தேர்வு உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு"
டெட் தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2011க்கு முன்பாக ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனை அமல்படுத்தினால் மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் கட்டாய ஓய்வில் செல்ல நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் அன்பில்மகேஷ், அப்படி நடந்தால் அவர்களுக்கு ஈடாக ஒரே நேரத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுவதோடு,
இனிமேல் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு டெட் கட்டாயம் என்பதை மனுவில் தெளிவுப்படுத்துவோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
