இந்தியாவுக்கு கடன்பட்டு நிற்கும் பிரிட்டன் ராணுவம்-மத்திய அரசு தலையிடுமா?
இயந்திர கோளாறால் திருவனந்தபுரத்தில் முடங்கிய பிரிட்டிஷ் போர் விமானமான F35, நாளை புறப்படுகிறது..
கேரள கடல் பகுதி அருகே கடந்த ஜூன் 14ம் தேதி, பிரிட்டிஷ் போர் கப்பலிலிருந்து வானில் பறந்த அந்த போர் விமானம் காலநிலை மோசமானதால் திரும்ப கப்பலில் இறங்க முடியாமல் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் அங்கிருந்து புறப்பட முயன்றபோது இயந்திரக் கோளாறு காரணமாக புறப்பட இயலவில்லை. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்தனர்...
இதையடுத்து பிரிட்டிஷ் போர் விமானம் நாளை புறப்படவுள்ள நிலையில், அதன்பின்னர் தொழில்நுட்பக் குழுவினரும் புறப்படுவர். ஜூன் 14ம் தேதியிலிருந்து விமானம் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டதற்கான வாடகை அதானி நிறுவனத்திற்கும், ஹேங்கரில் நிறுத்தப்பட்டு சரி செய்ததற்கான கட்டணம் ஏர் இந்தியாவுக்கும் பிரிட்டன் அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு தலையிட்டால் வாடகை கட்டணம் குறைய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
