நன்றி தெரிவித்த பிறகு தான் பதவியேற்பு - ரவீந்திரநாத் உறுதி

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிறகு தான் எம்பி பதவியேற்பேன் என தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
நன்றி தெரிவித்த பிறகு தான் பதவியேற்பு - ரவீந்திரநாத் உறுதி
Published on
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிறகு தான் எம்பி பதவியேற்பேன் என தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். சோழவந்தான், தேனூர் , சமயநல்லூர் பகுதிகளில் நான்காவது நாட்களாக வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய ரவீந்திரநாத், சோழவந்தான் பகுதியில் தான் முதலில் பிரசாரத்தை ஆரம்பித்ததாகவும், எனவே நன்றி தெரிவித்த பிறகு தான் பதவியேற்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். தொகுதி பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன் என்றும் அவர் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com