முருக பக்தர் மாநாட்டுக்கு ரஜினி பங்கேற்பா ? ரஜினிகாந்த் தரப்பு விளக்கம்
மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள போவதில்லை என்று பிஆர்ஓ ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார்.இந்து முன்னணி சார்பில் ஜூன் 22ம் தேதி மதுரையில் பிரம்மாண்டமான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.இதனிடையே நடிகர் ரஜினிகாந்த், இந்த மாநாட்டில் பங்கேற்பதாக தகவல்கள் பரவின. இதற்கு பிஆர்ஓ ரியாஸ் அகமது மறுப்பு தெரிவித்துள்ளார்
Next Story
