Kallakurichi Collector Issue | ``இனியாவது நடவடிக்கை எடுப்பாரா?'' - எம்.பி. கனிமொழி பரபரப்பு கேள்வி
#Kallakurichi #CollectorIssue #CMVijay #TNPolitics #ThanthiTV Kallakurichi Collector Issue | ``இனியாவது நடவடிக்கை எடுப்பாரா?'' - எம்.பி. கனிமொழி பரபரப்பு கேள்வி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்தபோதே, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசியபோது அரசியல் செய்வதாக விமர்சித்தவர்கள், தற்போது என்ன சொல்லப் போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரைப் பாராட்டுவதாக கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை நாட்களாகியும் தனது கட்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர், இனியாவது நடவடிக்கை எடுப்பாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களின் பாதுகாப்பைவிட கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியமா எனக் கேள்வி எழுப்பிய கனிமொழி, தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்றும் தெரிவித்துள்ளார்.
