அங்கும் இங்கும் ஓடி ஆட்டம் காட்டிய காட்டு யானைகள் - வைரலாகும் வீடியோ
நீலகிரியில் நகரப்பகுதிக்குள் காட்டு யானைகள் அங்கும் இங்கும் ஓடி,வனத்துறையினரை கலங்கடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் உணவுத்தேவைக்காக காட்டு யானைகள் நகரத்தில் நுழைந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இரவு நேரத்தில் நகரத்தில் நுழைந்த யானைகளை வனத்துறையினர் விரட்ட முற்பட்ட போது, அங்கும் இங்கும் ஓடி வனத்துறையினருக்கு தண்ணி காட்டிய வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
Next Story
