Wild Elephants Video |மின் வேலிக்குள் புகுந்து பக்குவமாக சென்ற காட்டுயானைகள்..ஆச்சரியமூட்டும் வீடியோ

x

Wild Elephants Video |மின் வேலிக்குள் புகுந்து பக்குவமாக சென்ற காட்டுயானைகள்..ஆச்சரியமூட்டும் வீடியோ

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில், உணவு தேடி வந்த காட்டு யானைகள், மின்வேலியை பக்குவமாக கடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. வெள்ளியங்கிரி கோவில் செல்லும் வழியில், மூன்று யானைகள் வந்தன. அவைகள், சாலையோரத்தில் போடப்பட்ட மின்வேலியை பாதுகாப்பாக கடந்து வேகமாக சென்றன. கடந்த சில வாரங்களாகவே இந்த பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாகவும், அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்