ஓடி வந்து ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு யானை | உயிர்தப்பிய திக் திக் காட்சி
கோவையில் காட்டு யானை ஒன்று வனத்துறையினர் வாகனத்தை, ஆவேசமாக தாக்கி கண்ணாடியை உடைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில், இரவு நேரத்தில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். விரட்டும் போது ஆத்திரமடைந்த காட்டு யானை, ஆவேசமாக ஓடி வந்து வனத்துறையினர் வாகனத்தை இடித்து தள்ளியதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட வனத்துறையினர் வாகனத்தை பின்னால் இயக்கி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Next Story
