துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடப்பட்ட காட்டெருமை
உதகை அருகே காட்டெருமை ஒன்று துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுடப்பட்டு காட்டெருமை உயிரிழப்பு..
சந்தேகத்தின் பெயரில் இருவரை கைது செய்துள்ள வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உதகை அருகே கல்லக்கொரை பகுதியில் நேற்று இரவு காட்டெருமை ஒன்று சாலையில் இறந்து கிடந்துள்ளது .
காட்டெருமை இறந்தது குறித்து சாலையில் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற வனத் துறையினர் இறந்த காட்டெருமையின் உடலை ஆய்வு செய்தபோது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது காட்டெருமை உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.
இறந்த காட்டெருமையின் உடலில் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் அகற்றப்பட்ட நிலையில் காட்டெருமையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாகுபடிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ரோந்து பணிகள் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
சத்தேகத்தின் பெயரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் காட்டெருமைகள் சுடப்பட்டு வேட்டையாடிய சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும் துப்பாக்கியால் காட்டெருமை சுடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
