அடிமை கணவனை திருத்த தன் உயிரை மாய்த்த மனைவி - காஞ்சியில் பயங்கரம்

கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தாஸ், நிகிதா தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், மதுவுக்கு அடிமையான தாஸ் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் நிகிதா கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல் தாஸ் குடித்து விட்டு வந்த போது, திடீரென அவரது மனைவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக நிகிதாவின் உடலில் தீ பற்றியுள்ளது. இதனை கண்ட தாஸ் தீயை அணைக்க முயற்சித்த போது, அவர் மீதும் தீ பற்றிக் கொண்டது. இருவரையும் அருகில் இருந்தவர்கள், மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், நிகிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தாஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்...

X

Thanthi TV
www.thanthitv.com