வரதட்சணை கேட்டு மனைவி கொலை..2 ஆண்டுகளாக நாடகமாடிய ராணுவ வீரர்

தேனியில் வரதட்சணை பிரச்சினையில் மனைவியை கொன்று இரண்டு ஆண்டுகளாக நாடகமாடிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
வரதட்சணை கேட்டு மனைவி கொலை..2 ஆண்டுகளாக நாடகமாடிய ராணுவ வீரர்
Published on

வரதட்சணை கேட்டு மனைவி கொலை..2 ஆண்டுகளாக நாடகமாடிய ராணுவ வீரர்

தேனியில் வரதட்சணை பிரச்சினையில் மனைவியை கொன்று இரண்டு ஆண்டுகளாக நாடகமாடிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.உசிலம்பட்டியைச் சேர்ந்த செல்வம், தனது மகள் கிரிஜா பாண்டியன் காணவில்லை என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து ராணுவ வீரர் ஈஸ்வரனை தேடி வந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தலைமறைவாக இருந்த ஈஸ்வரனை கடந்த இரு தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் 2019 டிசம்பர் 25ல் மனைவி கிரிஜா பாண்டியனை அடித்து கொலை செய்தது அம்பலமானது. கொலை செய்தபின் தனது மனைவியின் உடலை அரண்மனைப்புதூர் முல்லை பெரியாற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஈஸ்வரன், அவரின் தாய் செல்வி, சகோதரர் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸ், தீயணைப்பு படை உதவியுடன் கிரிஜா பாண்டியன் உடலை தேடி வருகின்றனர். இதனிடையே மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், கொலையாளிகளை சிறையில் அடைத்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com