Chennai | காதலனை வீட்டிற்கு அழைத்து படுக்கையில் விருந்து வைத்த மனைவி..கணவனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை
காதலனை வீட்டிற்கு அழைத்து படுக்கையில் விருந்து வைத்த மனைவி.. இடையூறாக இருந்த கணவனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை - சென்னையில் பகீர் சம்பவம்
குடும்பத்திற்காக, நேரம் காலம் பார்க்காம, சோறு தண்ணீ சாப்பிடாம தெருதெருவா சுற்றி டெலிவரி ஏஜென்ட்டா வேலை பார்த்து இருக்காரு கணவர்.
ஆனா, அவரோட மனைவி ரகசிய காதலன வீட்டுக்கு அழைச்சு படுக்கையிலயே விருந்து வெச்சிருக்காங்க.. கள்ளக்காதல தட்டிகேட்டதால நடந்திருக்கு இந்த படுபயங்கர கொலை...
ஃபுட் டெலிவரி செய்யும் ஊழியரை அவருடைய மனைவியின் சகோதரர்கள் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டும் பகீர் சிசிடிவி காட்சி தான் இது...
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.
கொலை செய்யப்பட்டவரின் பெயர் கலையரசன். சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர்.
பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்பு கலையரசன் அதே பகுதியை சேர்ந்த தமிழரசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இந்த தம்பதிக்கு மூன்று வயதில் அழகான ஆண் குழந்தையும் உள்ளது.
கலையரசன், நாள் முழுக்க பைக் ஓட்டி சம்பாதித்த வருமானத்தில் மனைவி மற்றும் மகனுக்கு தன்னால் முயன்றதை செய்து வந்துள்ளார். எனினும், காதல் மனைவியின் எதிர்பார்ப்புகளை கலையரசனால் பூர்த்தி செய்யமுடியவில்லை, இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ தொடங்கி உள்ளனர்.
இந்த சூழலில் தான், சம்பவம் நடந்த ஜுன் 15 ம் தேதி கலையரசன் அவரின் மூன்று வயது மகனை சாலையில் தற்செயலாக சந்தித்துள்ளார்.
தன்னுடைய உயிரை பார்த்த உற்சாகத்தில் கலையரசன் அந்த குழந்தையை அருகிலிருந்த கடைக்கு அழைத்து சென்று பிடித்ததையெல்லாம் வாங்கி கொடுத்துள்ளார். இதனை கண்டு கொதித்தெழுந்த தமிழரசியின் சகோதரர்கள் கலையரசனிடம் “எங்க அக்கா குழந்தைக்கு சாக்லெட் வாங்கி கொடுக்க நீயாரு..“ ? எனக் கேள்வி கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். எனினும் அன்றிரவே கலையரசனுக்கு சுத்துப்போட்ட தமிழரசியின் சகோதரர்களான சஞ்சய், சுனில், சக்தி ஆகிய மூவரும் நடுரோட்டில் மாமனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலையரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோயிருக்கிறார்.
இதைதொடர்ந்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீஸார், கலையரசனின் மனைவி தமிழரசியிடம் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்திருக்கிறது.
கணவரை பிரிந்த தமிழரசி அதே பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞருடன் கள்ளக்காதலை வளர்த்துள்ளார். இதனை கேள்விப்பட்டு கலங்கிப்போன கலையரசன் மனைவியின் இந்த தகாத உறவை கண்டித்துள்ளார்.
அதோடு, மகனை செல்லம் கொஞ்சுவதற்காக ஆசை ஆசையாக வரும் கலையரசன் மனைவியை பார்த்ததும் தொடர்ந்து வெறுப்பை வெளிபடுத்தி வந்துள்ளார். காரணம், கள்ளக்காதலனுக்கு படுக்கையில் விருந்து வைத்த தமிழரசி, காதல் கணவனை டெலிவரி பாயை போல ட்ரீட் செய்து அவரை வீட்டு வாசலிலயே நிற்க வைத்து குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் நோகடித்திருக்கிறார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பெத்த மகனுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்ததை மைத்துனர்கள் கண்டித்ததால் கலையரசன் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்.
