``தங்க தட்டுல வச்சி பாத்தேனே.. தூக்குல போடுங்கய்யா’’ - சொல்லிட்டு செத்துப்போன கணவன்
கன்னியாகுமரி அருகே மனைவி ஆண் நண்பருடன் சென்ற சோகத்தில், தற்கொலை செய்து கொண்ட கட்டட தொழிலாளியின் வீடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொன்னக்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின். இவரது மனைவி சுனிதா. திருமணம் ஆகி இருவரும் 19 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், சுனிதா சமீபத்தில் கணவரை பிரிந்து ஆண் நண்பருடன் சென்றுள்ளார். இதனால், வேதனை அடைந்த பெஞ்சமின், மனைவிக்காக ஆசையாக கட்டிய வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு காரணமானவர்கள் தூக்கிலிட வேண்டும் என பெஞ்சமின் தற்கொலைக்கு முன்பு பதிவு செய்த வீடியோ தற்போது வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
