தற்கொலைக்கு முயன்ற மனைவி - கணவரிடம் விசாரணை
தற்கொலைக்கு முயன்ற மனைவி - கணவர் கைது
சென்னை அரும்பாக்கத்தில் கணவன், வேறோரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகாரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அரும்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தேவி - முரளி தம்பதிக்கு திருமணமாகி, 7 வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவி தனது நகைகளை அடகு வைத்து வடபழனியில் வீடு ஒன்று வாங்கிய நிலையில், முரளி தனது மனைவியை பிரிந்து அதில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற தேவி, கணவரிடம் தன் நகைகளை மீட்டு தருமாறு கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவர் வீட்டில் வேறொரு பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவி, இது குறித்து கேட்டபோது கணவர் அப்பெண்ணை தான் திருமணம் செய்ய போவதாக கூறியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.