மதுப்பழக்கத்தை நிறுத்தச் சொன்ன மனைவி - உயிரை மாய்த்த கணவர்
கள்ளக்குறிச்சி அருகே மனைவி கண்டித்ததால் மதுவில் விஷத்தை கலந்து கணவன் தற்கொலை செய்து கொண்ட விபரீதம் அரங்கேறியுள்ளது. பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், மதுவுக்கு அடிமையானதாக கூறப்படும் நிலையில் இதனை அவரது மனைவி பார்வதி கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பார்வதி, தனது உறவினர் வீட்டிற்கு செல்லவே, மனமுடைந்த சங்கர் மதுவில் விஷத்தை கலந்து உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story