தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக பெய்த மழை

x

திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

சேலம் மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, ஓமலூர், தீவெட்டிபட்டி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. சேலம் அழகாபுரம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மரம் சூறைக்காற்றினால் சரிந்து விழுந்ததில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த நேரத்திற்கு வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வரும் நிலையில், 4வது நாளாக கனமழை பெய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அதனை ஒட்டிய பகுதிகளில், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.


Next Story

மேலும் செய்திகள்