Kilamabakkam Issue | கிளாம்பாக்கத்தில் கொந்தளிக்கும் பயணிகள்
2 வது நாளாக பேருந்து பற்றாக்குறை - பயணிகள் காத்திருப்பு
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக தென் மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததின் காரணமாக, பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்சி, சேலம், அரியலூர், நெல்லை, கன்னயாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. வெகு நேரம் காத்திருந்த பயணிகள் அங்கு காவல் பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்த நிலையமானது இரவு முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story
