``நேற்று 2 VIP-க்கள் பெயரை பிரதமர் உச்சரிக்காதது ஏன்?’’ -

x

"பிரதமர் மோடி பங்கேற்ற விழா - தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு“ - திமுக எம்எல்ஏ விமர்சனாம்

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஜெயங்கொண்டம் திமுக எம்.எல்.ஏ கண்ணன் முகநூல் பக்கத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்... கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை உள்ளிட்ட முப்பெரும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்... இந்நிலையில், மாநில அரசின் சார்பில் கலந்து கொண்ட 2 அமைச்சர்களின் பெயர்களையும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசவில்லை எனவும், விழா நடைபெற்ற தொகுதியின் எம்.எல்.ஏ என்ற முறையில் தனது பெயர் விழா அழைப்பிதழில் இடம் பெறவில்லை எனவும் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்... அதே சமயம் தூத்துக்குடியில் பிரதமர் பங்கேற்ற விழா அழைப்பிதழில் திமுக எம்.எல்.ஏ சண்முகம் பெயர் இடம் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் அழைப்பிதழ் தனக்கு வரவில்லை என ஆட்சியரிடம் முதல் நாள் இரவு குறுந்தகவல் அனுப்பிய பிறகுதான் தனக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதாகவும், பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் விசிகவினருக்குக் கூட அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டதாக முகநூல் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்