ஆதவ் ஆபீஸ் இருக்கும் தெருவுக்குள் திமுக நிர்வாகி கார் சென்றது ஏன்? - வெளியானது உண்மை

x

ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தை யாரும் நோட்டமிட விரவில்லை என சென்னை போலீஸ் விளக்கம்

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்தை யாரும் நோட்டமிட வரவில்லை என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், ஆதவ் அர்ஜுனா அலுவலகம் அமைந்துள்ள கஸ்தூரி ரங்கன் சாலையில் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்தவர்கள், திருவொற்றியூரை சேர்ந்த கணேசன், ராமு, புஷ்பராஜ் என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள், திரைப்படத் துறையில் சிறு வேடங்களுக்காக சினிமா பிரபலங்களை பார்த்து அவர்களுடன் புகைப்படம் பிடிக்கும் வழக்கத்தை கொண்டவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள திமுக நிர்வாகி குமரேசனின் கார், வழி தெரியாமல் அந்த தெருவுக்குள் வந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தை யாரும் நோட்டமிட வரவில்லை என்பதும், அவர்கள் எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் வந்து சென்றனர் என்றும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்