"யார் கெத்து?" கட்டைகளுடன் கண்மூடித்தனமான தாக்குதல் | வெளியான அதிர்ச்சி வீடியோ
யார் கெத்து என நடந்த மோதல் - 6க்கும் மேற்பட்ட நபர்கள் கைது
சென்னை கொடுங்கையூரில் இரு பிரிவினரிடையே நடந்த மோதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னாண்டிமடம் பகுதியில் சதீஷ் என்ற இளைஞர் தலைமையில் ஒரு கும்பலும், அருண்குமார் என்ற இளைஞர் தலைமையில் மற்றொரு கும்பலும் இருதரப்பாக பிரிந்து யார் பெரியவன் என்கிற அடிப்படையில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், மதுபோதையில் இருந்த இரண்டு கும்பலும், சின்னாண்டிமடம் கடும்பாடி அம்மன் கோவில் அருகே ஒருவரை ஒருவர் கட்டை, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கண்மூடித்தனமாக தாக்கி கொண்டனர்.
Next Story
