தவெக மாநாட்டில் பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட உண்மையான இளைஞர் யார்?

x

த.வெ.க வினர் தன் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்கத் தயார் என, மாநாட்டில் பவுன்ஸர்களால் தள்ளிவிடப்பட்ட இளைஞர் சரத் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த இளைஞர், மாநாட்டில் தள்ளிவிடப்பட்டது நான்தான் என தெரிவித்தார். மேலும், தனக்கு அடிக்கடி போன் மூலமாக மிரட்டல் வருவதாகவும், இது தொடர்பாக தன் மீது த.வெ.க கட்சியினர் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார். இளைஞர் சரத் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், தான் மாநாட்டில் கலந்து கொண்ட புகைப்படத்தை காட்சிப்படுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்