சென்னையில் வெளுத்து வாங்கிய மழை - எங்கே அதிக மழை பதிவு?

x

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த காற்று மற்றும் இடியுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்த நிலையில், வெள்ளம் தேங்குவதும் வடிவதுமாக இருந்தது. அதிகபட்சமாக சென்னை ஏ சி எஸ் மருத்துவக் கல்லூரியில் 10.3 சென்டிமீட்டர் மழையும், காட்டுப்பாக்கத்தில் 7.7 சென்டிமீட்டர் மழையும், நந்தனத்தில் 6.6 சென்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 5.8 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 3.9 சென்டிமீட்டர் மழையும் பதிவானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்