Whistle | 2 மாதங்களாக குழந்தையின் மூச்சு குழாயில் `விசில்' - அடுத்து நடந்தது..?

x

திருவண்ணாமலையில் 2 மாதங்களுக்கு முன் விசிலை விழுங்கிய குழந்தைக்கு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள், 3 மணி நேரம் சிகிச்சை அளித்து, விசிலை அகற்றினர்.

திருவண்ணாமலையை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை, கடந்த நவம்பர் மாதம், விளையாடும் போது தவறுதலாக விசிலை விழுங்கியுள்ளார்.அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதித்தபோது, குழந்தையின் உடல் நிலையில் பாதிப்பு இல்லாததால், விசிலை அகற்றாமல் அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை மூச்சு விடும்போது விசில் சத்தம் கேட்டதால் அச்சமடைந்த பெற்றோர், குழந்தையை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில், குழந்தை விழுங்கிய விசில் மூச்சு குழாயின் ஆழமான பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நுரையீரல் பிரிவு பேராசிரியர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர், 3 மணி நேர தீவிர முயற்சிக்குப் பின் விசிலை வெற்றிகரமாக அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்