நடிகர் தாமு பேசப் பேச.. தேம்பி தேம்பி அழுத மாணவிகள்,காவலர்கள்! - கடைசியில் அவர் சொன்ன விஷயம்

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்ற தலைப்பில் ஐ.சி.எப் அம்பேத்கர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 6 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 200 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாமு, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாடினார். பெற்றோர் படும் துன்பங்கள் குறித்து தாமு பேசியபோது, அரங்கில் இருந்த பெண் காவலர் உட்பட அனைவரும் கண் கலங்கிய சம்பவம் அரங்கேறியது.

X

Thanthi TV
www.thanthitv.com