இந்த மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும்? - அதிகாரிகள் சொன்ன தகவல்

கலைஞர் மகளிர் உரிமை தொகை இன்று‌ இரவுக்குள் அனைத்து பயனாளிகளுக்கு செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாத‌மும் 15 ஆம் தேதி, மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த‌து. இந்த மாதம் 15ஆம் தேதி ஞாயிறுக்கிழமை என்பாதால், இன்றே உரிமைத் தொகை செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணாளிகளின் வங்கிக் கணக்குகளிலும் இன்று இரவுக்குள் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com