

ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பாடம் கற்பிக்கும் முயற்சியில், கடலூரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர்.
* பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே பாடம் நடத்தி, அதை வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு அவர்கள் அனுப்பி வருகின்றனர்...
* வீட்டில் கரும்பலகை இல்லாத ஆசிரியர்கள், ஒரு படி மேலே போய் , வீட்டின் கதவையே கரும்பலகையாக்கி பாடம் நடத்துகின்றனர். இது மட்டுமின்றி வீடியோ கால் மூலமும் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் தங்களது சந்தேகங்களையும் இதில் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
* இதுபோன்ற நடைமுறைகள் அடுத்தக்கட்ட கல்விக்கான தொடக்கம் என்கிறார் கல்வியாளர் ஆயிஷா நடராஜன்...