``எந்த அதிகாரி சொன்னா அந்த மாதிரி..’’ ஊராட்சி செயலரை பூட்டி வைத்து மக்கள் ஆவேச போராட்டம்

x

ஊராட்சி செயலரை அலுவலகத்தில் பூட்டி வைத்து போராட்டம்

கடலூரில் ஊராட்சி செயலரை அலுவலகத்தில் பூட்டி வைத்து போராடிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே ஜா.ஏந்தல் ஊராட்சியில், வீட்டு வரி குடிநீர் வரி செலுத்திய ரசீது காண்பிப்பவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என ஊராட்சி செயலர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊராட்சி செயலரை அலுவகத்திற்குள்ளேயே பூட்டி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்