தமிழக SBI ஏடிஎம்மில் இருந்தது என்ன? - மும்பையில் இருந்து அடித்த எச்சரிக்கை மணி
கடலூர் ஏடிஎம் மிஷினில் சிப்.. மும்பையில் இருந்து வந்த அலர்ட்! 2 பேரிடம் விசாரணை
கடலூரில் ஏடிஎம் மிஷினில் சிப் வைத்து திருடப் பார்ப்பதாக, மும்பையில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அளித்த தகவலின் பேரில், 2 வட மாநிலத்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. செம்மண்டலம் பகுதியில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மிஷினில், சிப்பை வைத்திருப்பதாக கடலூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு, உயர் அதிகாரிகள் அலர்ட் கொடுத்தனர். இதை அடுத்து, பதறிப்போன வங்கி ஊழியர்கள் ஏடிஎம் மிஷினில் இருந்த சிப்பை அகற்றினர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தனர். அதில், சந்தேகப்படும் படியாக வந்து சென்ற வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை பிடித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
