"என்னாது இது..?" - குணா குகையில் அமர்ந்து ஆராய்ச்சி செய்த குரங்கு - வைரல் வீடியோ

x

கொடைக்கானல் குணா குகையில் சுற்றுலா பயணியின் ஹேண்ட் பேக்கை பிடுங்கிக் கொண்டு மரத்தின் உச்சிக்கு சென்ற குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொடைக்கானலில் வனத்துறை கட்டுபாட்டில் உள்ள குணா குகை பகுதிக்கு வழக்கத்திற்கு அதிகமாக தற்போது சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், குணா குகை பகுதியில் சுற்றுலா வந்த பயணி ஒருவரது கைப்பையை குரங்கு ஒன்று எடுத்து கொண்டு மரத்தின் உச்சிக்கு சென்றுள்ளது. பையை மீட்பதற்காக சுற்றுலா பயணிகள் முயற்சித்த நிலையில், மீட்க முடியவில்லை. இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்