என்னது இவன் ஒரு சீரியல் கில்லரா? - செஞ்ச பல காரியங்கள கேட்டா நடுங்கிடுவீங்க

x

சேலத்தில் போலீசால் சுட்டு பிடித்தவர் சீரியல் கில்லர்

சேலத்தில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன், மேலும் பலரை கொலை செய்தது, தெரியவந்து உள்ளது. சேலம் ஓமலூர் தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில், சரஸ்வதி என்ற மூதாட்டியின் காது, மூக்கை அறுத்து கொலை செய்துவிட்டு கொள்ளை அடித்த வழக்கில், பிரபல ரவுடி நரேஷ்குமாரை மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சுட்டு பிடித்தனர். இவர் மீது சேலம், கிருஷ்ணகிரி, விருதுநகர், திருப்பூர் என பல்வேறு இடங்களில் தனியான தோட்டத்து வீடுகளில் வசித்த மூதாட்டிகளை குறிவைத்து தாக்கி கொள்ளை அடித்தது என்பன உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த 2020ஆம் ஆண்டு மல்லூர் காவல் நிலையத்தில் மூதாட்டி லட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கும், கடந்த 20ஆம் தேதி தீவட்டிபட்டியில் மூதாட்டி சரஸ்வதியை கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கும் இவர் மீது உள்ளன. இதில், சேலம் மாவட்ட போலீசார் இவரை 2 வழக்குகளில் கைது செய்தனர். இதனிடையே, கடந்த 9ஆம் தேதி இவர் தமிழக - கர்நாடகா எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளியில், 60 வயது முதியவரை தாக்கி செல்போன், பணம் உள்ளிட்டவையை கொள்ளையடித்ததும், தெரியவந்தது. இதுகுறித்து கர்நாடகாவின் அத்திப்பள்ளி போலீசாரும், தமிழக போலீசின் உதவியோடு அவரிடம் விசாரணையை தொடங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்