நாட்டாகுடியில் என்ன பிரச்னை? ஊரே காலியான அதிர்ச்சி..? கலெக்டர் சொன்ன விளக்கம்

சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில் 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாட்டாகுடியில் 56 வீடுகள் உள்ளன. இந்நிலையில் தற்போது இந்த கிராமத்தில் பொது மக்கள் யாரும் வசித்து வரவில்லை எனவும், இங்கு அடிப்படை வசதிகள் இல்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளிவருகின்றன. இதனையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, நாட்டாகுடியில் 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com