என்ன ஒரு நேர்மை" - பாராட்டிய போலீஸ்.. பணிப்பெண்ணுக்கு கிடைத்த தங்க பரிசு
சென்னை அயப்பாக்கத்தில், திருமண மண்டபத்தில் கிடைத்த 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைபெட்டியை மண்டப மேலாளரிடம் ஒப்படைத்த பணிப்பெண்ணின் நேர்மையை போலீசார் பாராட்டிய நிலையில், நகையின் உரிமையாளர் 4 கிராம் தங்க மோதிரம் வழங்கி கெளரவித்துள்ளார். சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியர் கடந்த மாதம் 27ம் தேதி அயப்பாக்கத்தில் நடைபெற்ற தங்கள் உறவினர் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது நகைபெட்டியை அங்கேயே தவறவிட்டுச் சென்றுள்ளனர். இதனை மண்டபத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருச்சியை சேர்ந்த ஜெயமணி என்ற பெண்,உடனடியாக மண்டப மேலாளரிடம் ஒப்படைத்த நிலையில், அவர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார், மண்டபத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நகையை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.