என்ன ஒரு புத்திசாலித்தனம்..' - வாட்ச்மேனை பார்த்ததும் ஒளிந்து நின்ற கரடி
காவலாளியை கண்டு ஒளிந்து கொண்ட கரடி - சிசிடிவி காட்சி
உதகையில் தனியார் பங்களாவிற்குள் நுழைந்த ஒரு கரடி, காவலாளி டார்ச் லைட் அடித்தபோது ஒளிந்து கொண்டு ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பங்களாவில் நுழைந்த ஒரு கரடியானது டீ, மேசைகள் இருந்த பகுதியில் மெதுவாக உணவு தேடிவிட்டு ஒரே இடத்தில் நின்றது. அப்போது காவலாளி டார்ச் லைட் அடித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரடி அசையாமல் நின்று கொண்டது. காவலாளி சென்றதும், அந்த கரடி மின்னல் வேகத்தில் மாயமானது. இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Next Story
